Work Visa for USA

அமெரிக்க ஐக்கிய நாடுகள் அல்லது அமெரிக்கா என்பது வட அமெரிக்கக் கண்டத்தின் முதன்மையான ஒரு நாடு ஆகும். இது 50 மாநிலங்களையும், ஒரு கூட்டமைப்பு மாவட்டத்தையும், ஐந்து …
அமெரிக்க ஐக்கிய நாடுகள் அல்லது அமெரிக்கா என்பது வட அமெரிக்கக் கண்டத்தின் முதன்மையான ஒரு நாடு ஆகும். இது 50 மாநிலங்களையும், ஒரு கூட்டமைப்பு மாவட்டத்தையும், ஐந்து முதன்மையான ஒன்றிணைக்கப்படாத நிலப்பரப்புகளையும், ஒன்பது சிறிய, வெளிப்புறத் தீவுகளையும் உள்ளடக்கியுள்ளது. தொல்குடி அமெரிக்கர்களுக்காக ஒதுக்கப்பட்ட 326 பகுதிகளையும் இது உள்ளடக்கியுள்ளது. நிலப்பரப்பளவு மற்றும் மொத்தப் பரப்பளவு ஆகிய இரு அளவுகளின் அடிப்படையிலும் அமெரிக்காவானது உலகின் மூன்றாவது மிகப்பெரிய நாடாகத் திகழ்கிறது. இது வடக்கே கனடாவுடனும், தெற்கே மெக்சிகோவுடனும் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. பகாமாசு, கியூபா, உருசியா, மற்றும் பிற நாடுகளுடன் கடல் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. 33.3 கோடிக்கும் மேற்பட்ட மக்களையுடைய இந்நாடு அமெரிக்காக்களில் அதிக மக்கள் தொகையுடைய நாடாகவும், உலகின் மூன்றாவது அதிக மக்கள் தொகையுடைய நாடாகவும் திகழ்கிறது. அமெரிக்காவின் தலைநகரம் வாசிங்டன், டி. சி. ஆகும். இதன் அதிக மக்கள் தொகையுடைய நகரம் மற்றும் முதன்மையான நிதி மையமாக நியூயார்க்கு நகரம் திகழ்கிறது.
  • தலைநகரம்: வாசிங்டன், டி. சி.
  • பெரிய நகர்: நியூயார்க்கு நகரம்
  • தேசிய மொழி: ஆங்கிலம் (நடைமுறைப்படி)
  • சமயம் (2021): 63% கிறித்தவம் · 40% சீர்த்திருத்தம் · 21% கத்தோலிக்கம் · 2% ஏனைய கிறித்தவர்கள் · 29% சமயமற்றோர் · 6% ஏனையோர் · 2% பதிலளிக்கவில்லை
  • மக்கள்: அமெரிக்கர்
  • அரசாங்கம்: கூட்டாட்சி அரசுத்தலைவர் அரசமைப்புக் குடியரசு
  • சட்டமன்றம்: பேரவை
தரவை வழங்கியது: ta.wikipedia.org